• Sat. Feb 15th, 2025

ஆப்கனில் அனைத்தும் முடிந்துவிட்டது- ஆப்கன் எம்.பி!..

By

Aug 22, 2021

காபூலில் இருந்து இந்தியா திரும்பிய ஆப்கானிஸ்தான் சீக்கிய எம்.பி, ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்று தேம்பிய குரலில் கண்கலங்க பேட்டி அளித்துள்ளார்.


இந்திய விமானப்படையினரால் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்ட எம்.பி.,க்களில் ஒருவரான நரேந்தர் சிங் கல்ச, “எனக்கு அழுகை வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனை மறுகட்டமைக்கும் பணியில் ஈடுபட்டோம். தற்போது அனைத்தும் முடிந்துவிட்டது. எங்களின் நிலை பூஜ்யம் தான். எங்களை மீட்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.விமான நிலையத்திற்கு தொடர்ந்து வந்தோம். தலிபான்கள் கொடூரமானவர்கள் காட்டுமிராண்டிகள். அங்கு நாங்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. விமான நிலையத்திலும் கூட ஏன் செல்கிறீர்கள்? போகாதீர்கள்?” என கூறியதாக கல்சா தெரிவித்தார்.


தலிபான்களை ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தற்போது 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் காபூலில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.