• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்..,

Byமுகமதி

Jan 24, 2026

புதுக்கோட்டையில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான த.புஷ்பராஜ் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் ப. நா.செல்வராஜா, பொருளாளர் ச.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பலகாரர், அம்பலக்காரன், மூப்பனார், உள்ளிட்ட 29 சாதிப்பிரிவுகளை உள்ளடக்கி முத்தரையர் என்ற ஒரே பொது பிரிவின் கீழ் அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் அவர்களுக்கென போதிய அளவு கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்த்து, அரசியல் போன்றவற்றில் மிகவும் பின்தங்கி இருப்பதாக நீண்ட காலமாக கோரிக்கைகள் இருந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் பரவலாகவும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும்பான்மையாகவும் இருக்கும் இந்த சமூகத்திற்கு போதிய அளவு உரிமைகள் கிடைக்கப்படவில்லை என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

அதேபோல் இந்த இன மக்களுக்கு என சங்கங்களும் அமைப்புகளும் தோன்றிய போதும் இன்னும் அவர்கள் சரியான முன்னேற்ற பாதைக்கு செல்வதற்கான தடைகள் நிறைய இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக பல அமைப்புகள் தோன்றி இருக்கின்றன. அந்த வகையில் தான் அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பாகும்.

அந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று புதுக்கோட்டை தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்களாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதி மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பான்மை சமூகமாக முத்தரையர் இனம் இருக்கிறது. தேசிய கட்சிகளாக இருந்தாலும் திராவிட கட்சிகளாக இருந்தாலும் முத்தரையர் இன மக்களை தான் வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை வைப்பது, கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரத்தில் எங்களுக்கு உரிய மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் எங்களுக்கு வழங்க வேண்டும்.

வரும் பிப்ரவரி மாதத்தில் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் ஒன்று புதுக்கோட்டையில் நடத்துவது, முத்தரையர் இன மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் எங்களது அமைப்பின் சார்பில் போட்டியிடுவதாக வேண்டாமா என்பது மாநில செயற்குழுவை கூட்டி ஆலோசனை செய்து பிறகு அறிவிப்போம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இந்நிகழ்வில் மேலும், இக்கூட்டத்தில் மாநகர ஒருங்கிணைப்பாளர், SP.ஆறுமுகம், செய்தித் தொடர்பாளர் துரையரசன், வழக்கறிஞர் பிரிவு சுந்தர்ராஜன்,
பாலையன் EX.Army, பொறியாளர் குணசேகரன், அறிவழகன்,மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ், செல்வக்குமார், தாமரைச்செல்வி பாலு, குமார், வீரமுத்து நல்லுச்சாமி, கறம்பக்குடி ஒன்றிய அமைப்பாளர் சடையராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
சுந்தர்ராஜ், மாவட்ட செயல்வீரர் MGR,செல்லையா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இந்திராணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் ம.ந.செல்வராஜா நன்றி தெரிவித்தார்.