• Tue. Mar 21st, 2023

அக்னிபத் திட்டத்தில் ஆட் சேர்ப்பு ராணுவம் அதிரடி அறிவிப்பு!

ByA.Tamilselvan

Jun 20, 2022

அகனிபத் திட்டத்தை கைவிடக்கோரி இந்தியா முழவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி ரயில்களுக்கு தீவைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இத்திட்டம் கைவிடப்படாது என்று ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.மேலும் அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பினையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் அக்னிபத் திட்டத்திற்கான விண்ணப்பபதிவு தொடங்குகிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *