• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய பெருங்கடலில் சாகசம் – கடலோர காவல்படை வீரர்களின் கூட்டு பயிற்சி

Byமதி

Nov 29, 2021

இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடலோர காவல்படை சார்பில் ‘தோஸ்தி’ என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு பயிற்சி நடைபெருவது வழக்கம். அப்படி இந்தவருடம் 30-வது ஆண்டை எட்டியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்தப்படும் இந்த முத்தரப்பு பயிற்சி. நேற்று முன்தினம் தொடங்கியது இந்த பயிற்சி, நேற்று மாலத்தீவில் நிறைவடைந்தது.

இதுகுறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், 3 நாடுகளின் கடலோர காவல்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குதல் போன்றவையே இந்த பயிற்சியின் நோக்கம் என கூறியுள்ளது.