• Wed. May 8th, 2024

எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்

Byகாயத்ரி

Nov 29, 2021

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ குறித்து பல தரப்பினரிடையே விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் வெளியானது. இந்தப்படம் வன்முறையை தூண்டும் படமாக உள்ளது. அதனை தடை செய்ய வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திரைத்துறை குறித்த தேவையற்ற விமர்சனங்கள், கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பாகக் கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களையும் கடுமையாக பதிவும் செய்திருக்கிறது.

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சி சகோதர சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.கட்சியில் முக்கியப்பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும் பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *