ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி -4.0” பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், இயந்திரவியல் துறை சார்பில், இத்தாலி காக்லியாரி பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏஎன்ஆர்எப் உதவிடன் “மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி மற்றும் தொழில் நிலையான வளர்ச்சி -4.0” குறித்த இரண்டு நாட்கள் சர்வதேச மாநாடு வேந்தர் முனைவர். கே. ஸ்ரீதரன் தலைமையில் துணைத் தலைவர் முனைவர். எஸ். சசி ஆனந்த் துவக்கி வைத்தார்.
துணை வேந்தர் முனைவர். எஸ். நாராயணன் மற்றும் பதிவாளர் முனைவர். வெ. வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர். டீன். வி. ஆறுமுகப்பிரபு வரவேற்றார்.
மாநாடு அமைப்பாளர் . டி. செந்தில் முத்துகுமார், மாநாட்டின் முக்கியத்துவம்.
நிகழ்ச்சி பற்றி பேசுகையில்..,
 180 ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைக்க பெற்றதாகவும், 15 உலகளாவிய வல்லுநர்கள் முக்கிய உரைகள் நிகழ்த்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தலைமை விருந்தினராக பேராசிரியர் சீரம் இராமகிருஷ்ணா, தேசிய பல்கலைக்கழகம் சிங்கப்பூர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
கெளரவ விருந்தினர்களாக, கிரிதர் ராஜு, சாலிட் ப்ரோ இன்ஜினியரிங், சென்னை மற்றும் பிளாவியோ ஸ்டோக்கினோ, காக்லியாரி பல்கலைக்கழகம், இத்தாலி கலந்து கொண்டு “மாநாட்டு மலரை” வெளியிட்டனர்.
வல்லுநர்கள் அனிஷ் கான், கே,ஏ. பல்கலைக்கழகம், சவுதி அரேபியா, ராகவாநந்தம் சண்முகம், பேரமண்ட்பல்கலைக்கழகம், அமெரிக்கா, மார்தா சகோன், கோஸ்டன்டினோ கார்லோ மாஸ்டினோ, சந்தோஷ் பரமசிவம், யுஒசி, இத்தாலி,
.அஸ்ரினா.இலியாஸ், தாய்பிடின், யாஹ்யா, லின் ஃபெங், மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அர்ணாஸ் மஜும்தார், யுஓசி, இத்தாலி, வினீத் அனியா, ஐசிடி, ஹைதராபாத், கோபிநாத் முவ்வல்லா, ஐஐடி, ஹைதராபாத் எஸ். மோகன், ஆர்சிஐ டிஜிட்டல், சென்னை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயந்திரவியல், விமானியல், ஆட்டோமொபைல், சிவில் பொறியியல் ஆகிய துறைகளின் பள்ளி அனைத்து பேராசிரியர்களும் , மாணவர்களும் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். துறைத்தலைவர் எம். ஆதம்கான் நன்றி உரையாற்றினார்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)