திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் கல்லூரி சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ADSP மகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே நிறைவு பெற்றது.
இந்தப் பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தி போதை பொருட்களுக்கு எதிராக கோஷமிட்டு சென்றனர்.