• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ் தரப்புக்கு அ.தி.மு.க. அலுவலகம் செல்ல அனுமதி மறுப்பு

ByA.Tamilselvan

Sep 9, 2022

அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல ஓபிஎஸ் தரப்புக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்த நிலையில், நீதிபதிகள் அடங்கிய அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்து உத்தரவு விட்டனர்.இந்நிலையில் எடப்பாடிபழனிசாமி 2 மாதங்கள் கழித்து நேற்று தலைமை கழகத்துக்கு சென்று கட்சி பணியில் ஈடுபட்டார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்குள் செல்ல எந்த தடையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக அலுவலகம் செல்ல முயன்றபோது அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.தற்போதைய சூழலில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் நீங்கள் செல்வதாக இருந்தால் உரிய சட்ட அனுமதியை வாங்கி வந்த பிறகு செல்வதே சரியாக இருக்கும் என்று ஓ.பி.எஸ். தரப்பினரிடம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று கோர்ட்டிலோ, அல்லது வருவாய் அதிகாரியிடமோ அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.