• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்று ஒரு நாள் பார்வைக்காக தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்திற்கு அனுமதி..!!

Byகாயத்ரி

Sep 28, 2022

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, ஓராண்டு நிறைவுடைந்ததையடுத்து, இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் பொது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் வாத்திய குழுவின் இசை நிகழ்ச்சி, காவல் மோப்ப நாய் கண்காட்சி, காவல் குதிரை கண்காட்சி, சிலம்பம், பொம்மலாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை மொத்தம் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.