• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே.8முதல் மாணவர் சேர்க்கை..!’

Byவிஷா

May 6, 2023

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 8ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு வருகின்ற மே எட்டாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,07,395 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு மே எட்டாம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே 23ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் எனவும் முதல் கட்ட பொது கலந்தாய்வு மே 30ஆம் தேதி முதல் ஜூன் ஒன்பதாம் தேதி வரையும் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.