• Mon. Mar 27th, 2023

மண்ணைக் காத்திட விலங்குகளாக மாறலாமே நடிகைகள் அக்கரை

உலக பூமி தினமான நேற்று, ‘ஈஷா’ யோக மையத்தின், ‘மண் காப்போம்’ அமைப்பு சார்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஈஷா அமைப்பை சேர்ந்தவர்களுடன், நடன கலைஞர் கலா, நடிகர் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடிகை அதா சர்மா அறிக்கையில், ‘காடுகளில் விலங்குகள் குப்பை போடுவதில்லை. மனிதர்கள் தான் குப்பையை கொட்டுகின்றனர். தயவு செய்து விலங்குகள் போல நடந்து கொள்ளுங்கள்’ என, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நடிகை தமன்னா விடுத்த அறிக்கையில், ‘விலங்குகள் தங்கள் உணவை மண்ணிலிருந்து பெறுகின்றன. ‘ஆனால், நம் மண் இறந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பறவைகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படும். இந்த பூமி தினத்தில், மண்ணை அழியாமல் காப்போம் என உறுதிமொழி எடுப்போம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *