• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இயக்குனர் பாரதிராஜா நலம் பெற நடிகை ராதிகா பிரார்த்தனை..

Byகாயத்ரி

Aug 25, 2022

இயக்குனர் பாரதிராஜா விரைவில் உடல்நலம் பெற நடிகை ராதிகா பிரான்சில் பிரார்த்தனை செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடி கட்ட பறந்த இயக்குனர் பட்டியலில் இருந்தவர் பாரதிராஜா. பல நடிகர், நடிகைகளின் அன்பை அளவில்லாமல் பெற்றவர். தற்போது அவருக்கு 80 வயது. சமீபமாக அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று அவர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சர்க்கரை நோய் பரிசோதனை செய்யவே மருத்துவமனைக்குச் சென்றார். சில நாட்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியாதால் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராதிகா, பாரதிராஜா விரைவில் குணமடைய பிரான்சில் உள்ள ‘Lourdes church;-ல் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்துள்ளார். என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே, பிரான்சில் உள்ள லூர்து தேவாலயத்தில் நீங்கள் விரைவில் குணமடைய எனது சிறப்பு பிரார்த்தனை. நான் திரும்பும்போது விரைவில் உங்களைப் பார்க்கக் காத்திருக்கிறேன், உங்களுடன் பேசுவதை மிஸ் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.