• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து நடிகை குஷ்பூ தேர்தல் பரப்புரை..,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி , மேல அனுப்பானடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் நடிகை குஷ்பூ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

சிந்தாமணி பகுதியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆனால் தற்போது இங்கு அதிமுகவை விட பாஜகவினர் அதிகமாக உள்ளனர்.

ஏராளமான தொண்டர்கள் காந்திக்கு உள்ளாய் அணிந்து பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பி உள்ளனர்.

மேலும் பாரதியார் ஜனதா பால்வாடி அணியும் குழந்தைகளுடன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்தாமணி பகுதிகளில் குடியிருந்த வாக்காளர்களிடம் ஐந்து வருட காலம் ஆட்சியில் இருந்தவர்கள் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என குறிப்பிட்டார். ஆனால் தொகுதி எம்எல்ஏ தற்போதைய வேட்பாளர் ராஜன் செல்லப்பா என்பதை மறந்து குஷ்பு பேசினார்.

மேலும் பேசி நிறைய மத்திய தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பிடிஆர் தியாகராஜனை குறிப்பிட்டு நிதி அமைச்சராக பல்வேறு பொறுப்புகளில் இருந்த தியாகராஜன் மதுரைக்கு எதுவுமே செய்யவில்லை குப்பை நகரமாக உள்ளது இதனை மாற்றி முதலிடத்திற்கு கொண்டு செல்ல எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.