• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டீ போட்டுக்கொடுத்து, வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம்!

Byகுமார்

Feb 12, 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்துக்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க பல்வேறு நூதன உத்திகளை வேட்பாளர்கள் கையாண்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் நூறு வார்டுகளிலும் பாஜக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக வேட்பாளர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மதுரை மாநகராட்சியில் 61வது வார்டில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு லட்சுமிக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம், மதுரை மாவட்டம் பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

61வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள டீக்கடையில் நடிகை காயத்ரி ரகுராம் காபி போட்டுக்கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து சைக்கிளை ஓட்டியபடி வார்டுக்குட்பட்ட பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.