தேனி அல்லிநகரம் நகராட்சியில் 16 வது வார்டில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வீ.காசிமாயன், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, பிரதான சாலையில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, வார்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.
தேனி மாவட்டம், தேனி அல்லி நகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.,- அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- பா.ஜ.க.,- அ.ம.மு.க., உள்ளி கட்சி வேட்பாளர்களுடன், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி, போட்டிக் கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் அவரவர் வார்டு பகுதியில் ஆதரவாளர்கள் ‘புடைசூழ’ கையில் கட்சிக் கொடியுடன் வேட்பாளர்கள் வலம் வருவதை காணமுடிகிறது. இவர்களில் முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவரும், அ.ம.மு.க., வின் 16வது வார்டு வேட்பாளரான வீ.காசிமாயன் ‘பிரஷர் குக்கர்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இரவு 8 மணிக்கு மேலும் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்து வரும், இவரது ஆர்வத்தை பலரும் பாராட்டுகின்றனர்.
வீ.காசிமாயனை சந்தித்தபோது,” நான் வெற்றி பெற்றால் என் வார்டில் சுகாதாரத்துடன், சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். தவிர வார்டு மக்களின் நலன் கருதி பிரதான சாலை சந்திப்புகளில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். நகராட்சி மக்களுக்கு நான் மிகவும் பரிட்சியமானவன். என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்தால், கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றுவேன்’ என்றார். இவரது எண்ணம் நிறைவேற, வார்டு பகுதியில் பிரஷர் குக்கர்…… ‘விசிலடிக்க’ நாமும் வாழ்த்துவோமாக.