• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தவறி விழுந்த நடிகை சைத்ரா ரெட்டி…நலமாக உள்ளதாகஅவரே போஸ்ட் பதிவு

Byகாயத்ரி

Nov 26, 2021

மக்களை கவர அடுத்தடுத்து தொடர்களை போட்டி போட்டு வழங்கி வருகிறது ஒவ்வொரு சானல்களும். இதில் சன் டிவியின் வரும் சீரியல்கள் கலக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களை கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது கயல். சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் நடிக்க சமீபத்தில் தான் தொடங்கியது அந்த சீரியல். முதல் வாரத்திலேயே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற தொடங்கிவிட்டது கயல் சீரியல்.


இந்த சீரியலின் ஹீரோயின் சைத்ரா ரெட்டி ஏற்கனவே அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இதற்கு முன் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது அவர் சன் டிவியில் நடிக்கும் சீரியல் முதலிடம் பிடித்திருப்பது பற்றி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.இந்நிலையில் சைத்ரா ரெட்டி கயல் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது வண்டியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த்துவிட்டதாக கூறி இருக்கிறார். இதனை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில், கயல் ஷூட்டிங்கில் காயமடைந்துவிட்டேன். ஷூட்டிங்கில் என் கியூட்டான வெஸ்பாவில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நன்றாக உணர்கிறேன். மெசேஜ் அனுப்பிய எல்லோருக்கும் நன்றி. Much love, என சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.