• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் அபராதம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர்  விஷால் ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என அவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதேசமயம் பட தயாரிப்பாளராகவும் உள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனம் மீதான சேவை வரி விவகாரத்திலேயே இந்த புகார் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு எதிராக சேவை வரி துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை சுமார் 10 முறை சம்மன் அனுப்பியுள்ளனர்..

ஆனால் விஷால் நேரில் ஆஜராகி அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி சரக்கு மற்றும் சேவை வரி துறை அதிகாரிகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி கூறும்போது , ‘அதிகாரிகள் 10 முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் வேண்டுமென்றே ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது. அவர் மீதான குற்றச்சாட்டின் தன்மை குறைவாக இருப்பதால் அவருக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படுகிறது, என்றார்..