• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முதல்வராக அஜித்! மதுரையில் போஸ்டரால்  சர்ச்சை!

Byகுமார்

Jan 3, 2022

மதுரையில், “தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ்” என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் சிலர், நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், “எங்களின் வலிமை-யை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும்!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.


மேலும், சட்டசபை முகப்பு கட்டிடத்தின் பின்னணியில் முதலமைச்சர் நாற்காலியில் நடிகர் அஜித்குமார் அமர்ந்திருப்பது போன்றும் போஸ்டரை வடிவமைத்து உள்ளனர்.

நடிகர் அஜித்குமார் அவரது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே கலைத்திருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு ரசிகர்கள் வழங்கிய “தல” எனும் பட்டத்தை கூட தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த சூழலில் தான் அவரை அரசியலுக்கும் இழுக்கும் வகையில் அவரது ரசிகர்கள் மதுரை மாநகர் பகுதியில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.