• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து கீழக்கரையில் நடிகர் வையாபுரி வாக்கு சேகரித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிமுக நகர செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையிலும் அவைத்தலைவர் சரவண பாலாஜி முன்னிலையிலும், இராமநாதபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து காமெடி நடிகர் வையாபுரி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் பொருளாளர் ஹரி நாராயணன் துணைச் செயலாளர் குமரன் மற்றும் எஸ்டிபிஐ நகர்தலைவர் சையது அபுதாஹிர், காதர், பைசல், சுல்தான், சிக்கந்தர் மற்றும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் தேமுதிக நகர செயலாளர் சதக்கத்துல்லா மீனவர் அணி நகர செயலாளர் முனியசாமி, எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் சி.கே.வேலன். இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வ கணேசன், பிரபு, இணையதள அணி இணைச் செயலாளர்கள் சிவராமலிங்கம், சன்ரைஸ் வினோத்குமார், விஜய், முனீஸ்வரன், பூக்கடை சுரேஷ், நவாபு, ஜேம்ஸ், ரஹீம், ஹபீப், மீன்கடை குமார் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வாக்கு சேகரித்தனர்.