• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நடிகர் சூர்யாவுக்கு காலதாமதமாக கிடைத்துள்ள தேசிய விருது

ByA.Tamilselvan

Jul 22, 2022

நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா சினிமா துறையில் துவக்ககாலமுதலே பல மாறுபட்ட கதைகள் ,கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்துவருபவர்.
தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றியமைத்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் நடிகர்சூர்யா. நடிகர் கமலுக்குபிறகு நடிப்புக்கு இலக்கணமாக திகழ்பவர் சூர்யா.பல ஆண்டு முன்பே அவருக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்ட்ட நிலையில் தற்போது தேசிய விருதுக்கு அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.


சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதணமனிதன் விமான நிறுவனம் தொடங்க முயற்திக்கும் கதையில் சிறப்பாக சூர்யா நடித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக இந்தபடம் தியோட்டரில் ரிலிஸ் செய்யப்படவில்லை ,அமேசான் பிரைம் நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.68-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை உட்பட 5 விருதுகளை சூரரைப்போற்று திரைப்படம் வென்றுள்ளது.

ரசிகர்கள் மத்தியிலும் ,விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்ற சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்தை அவரது ரசிகர்கள் கொண்டிடாடி வருகின்றனர்.