• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ

ByVasanth Siddharthan

Mar 9, 2025

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ 25வது திருமண நாளை முன்னிட்டு சுந்தர் சி மொட்டை அடித்து ,சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பூ தனது மகள் மற்றும் உறவினர்களுடன் பழனி மலை கோவிலில் தனது 25 ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடும் விதமாக முருகனுக்கு நடிகர் சுந்தர் சி முடிகாணிக்கை செலுத்தி நேர்த்தி கடன் செலுத்தினார். மேலும் விழா பூஜைகள் கலந்து கொண்டு சன்னியாசி அலங்காரத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் சுந்தர் சி சார்பில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது. பழனி கோவிலில் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.பின்னர் மின் இழுவை ரயில் வழியாக கீழே இறங்கி சென்றனர்.