ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’. வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.
தி பெட்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை வடபழநியில் உள்ள பிரசாத் லேபில்7.02.2021 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் கதாநாயகன் நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது,இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரஸ்மீட் வைக்க வேண்டுமா என்கிற தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், மக்கள் தொடர்பாளர் இருவரும் மிகுந்த நம்பிக்கை வைத்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.. ஆனால் இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இந்த இரண்டு வருடமாக கோவிட்டால் எல்லாமே மாறிப்போயிருந்தது.. படம் துவங்கும் தேதியையும் முடிக்கும் தேதியையும் முன்கூட்டியே தீர்மானித்து விட்டு நடந்தாலே தயாரிப்பாளர் தப்பித்து விடுவார்.
முதலில் டைட்டிலைக் கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது.. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது.. சில பேர் சொல்லும்போது ஒன்றாகவும், படமாக்கும்போது வேறு ஒன்றாகவும் செய்வார்கள்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. அப்படி செய்தால் வேறு சிலருடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள்..
எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது.. ஹேட்ஸ் ஆப் சிம்பு.. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு டோட்டலாக இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்து விடுவார்.. சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார்.. படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும்போது சில விஷயங்களில் நம் யோசனையை சொல்வோம்.. அது ஒரு நடிகர் என்று இல்லாமல் பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும்.
எல்லா இயக்குநர்களும் அவர்கள் மனதில் கதையை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அப்படித்தான் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.. ஆனால் படம் வெளியான பிறகு உண்மையான வெற்றி பார்வையாளர்களிடம் இருந்து தானே கிடைக்கும்..? அதனால் ஹீரோக்கள் சொல்லும் சில விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை..என்னைப் பொருத்தவரை ஐடியா கொடுப்பது தவறில்லை.. ஆனால் குறுக்கீடு செய்யக்கூடாது க்ளைமாக்ஸில் கூட எனக்கு சற்று கருத்து மாறுபாடு இருந்தது.. இயக்குநரிடம் அதை மாற்றி விடலாமா எனக் கூறினேன்.. ஆனாலும் தான் இப்படித்தான் மனதில் உருவகப்படுத்தி வைத்திருப்பதாக அவர் சொன்னார்.. சரி என அவர் விருப்பத்திற்கு விட்டு விட்டேன்.. அவர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைக் கொஞ்சமும் மாற்றாமல் அவர் போக்கிலேயே எடுத்துவிட்டார்.. அதேசமயம் தி பெட் என பெயர் வைத்திருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அழகான படமாக இது இருக்கும். இந்த டீசர் எல்லோரையும் கவரும் என்று நான் சொல்ல மாட்டேன்.. ஆனால் படம் சூப்பராக வந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்..
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே படத்திற்கான ஒளிப்பதிவாளரை நான் சிபாரிசு செய்யலாமா எனக் கேட்டேன்.. ஆனால் ஏற்கனவே கோகுலை ஒப்பந்தம் செய்து விட்டேன்.. அவர்தான் என் முதல் சாய்ஸ் என்று இயக்குநர் மணிபாரதி கூறினார்.. ஆனால் படப்பிடிப்பின்போதுதான், நான் என்னுடைய தவறை உணர்ந்தேன்.. ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவரது திறமையை எடைபோடுவது எவ்வளவு தவறு என்பதை கோகுல் எனக்கு உணர்த்தினார் அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளை படமாக்கியதுடன் என்னை மிகவும் அழகாக காட்டியுள்ளார் என்றார்.

- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]