தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தன்னுடைய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிட்டார். இதில் கேரள முதல்வர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புத்தகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படித்துள்ளார். இதனைப் படித்துவிட்டு ரஜினிகாந்த் தன்னுடைய பாராட்டுகளைத் தொலைபேசி வாயிலாக மு.க ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் ஒரு புத்தகத்தை படித்துவிட்டு தொலைபேசியில் தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்த ரஜினிகாந்துக்கு மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது
“உங்களில் ஒருவன்’ படித்து விட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது. ” என அவர் கூறியுள்ளார்.