



துபாய் கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

அப்போது நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த அஜித் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், அவரது அணி பங்கேற்று வெற்றி பெற்றது.
இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அஜித் குமாருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில், “என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்க சாதிச்சிட்டீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். லவ் யூ ” என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

