• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

நடிகர், தயாரிப்பாளர்! இப்போ பாடகர்! நடிகரின் அதிரடி வளர்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள எஃப்ஐஆர் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது! வசூலிலும் முன்னிலை வகிக்கிறது!

நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். ஜீவா உள்ளிட்ட படங்கள் இவருக்கு கைக்கொடுத்தது. இவரது கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது ராட்சசன்! சைக்கோ த்ரில்லராக வெளியான அந்தப் படம் அவருக்கு எவர்கிரீன் சக்சஸை கொடுத்தது.

இதையடுத்து தனக்கு சிறப்பான படத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதை சார்ந்தே தற்போது எஃப்ஐஆர் படத்தை தேர்ந்தெடுத்து நடித்ததாகவும் அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது எஃப்ஐஆர் படம். இந்தப் படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பலதரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் தீம் பாடலை நடிகர் சிம்பு பாடிக் கொடுத்திருந்தார். அந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக ராட்சசன் படத்திற்கும் இதேபோல தீம் பாடல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிம்பு பாடிய பாடலின் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தில் யா அல்லாஹ் என்ற பாடலை தீபக் ப்ளூ மற்றும் சுகந்த் சேகர் ஆகியோருடன் இணைந்து விஷ்ணு விஷால் அந்தப் பாடலை பாடியுள்ளார். அஷ்வத் இசையில் இந்தப் பாடல் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. இதன்மூலம் விஷ்ணு பாடகராகவும் மாறியுள்ளார்.