தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவை குழு வருகை புரிந்து மாவட்டத்தில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை என்று தலைவர் குமுறல். பாமக சட்டமன்ற உறுப்பினர் சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் பாமக மாவட்ட அலுவலகத்தில் அதிரடி பேட்டி அளித்தார்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேரளா எல்லையில் தமிழகத்தில் தென்காசி பகுதியில் பணிபுரிவதால் கேரளா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தை வளர்ச்சியில் இருந்து பின்னோக்கி தள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியர் உடந்தையாக உள்ளதாக கூறினார். குற்றாலம் பழைய குற்றாலம் புதிய பேருந்து நிலையம் மாவட்டத்தில் முக்கியமான பகுதிகளில் ஆய்வு செய்த போது பல்வேறு இடங்களில் குளறுபடியே காணப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தில் குடி தண்ணீர் கூட இல்லை என்று கூறினார்.
மாவட்டத்தில் பணிகள் ஏதும் முறையாக நடைபெறவில்லை ஊழல் நிறைந்த மாவட்டமாக தென்காசி உள்ளது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? கடந்த காலத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஓனம் பண்டிகை மிக சிறப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டாடினார். இப்பொழுது தான் தெரிகிறது அவர் ஏன் இப்படி செய்தார் என்று மனுக்கள் தமிழில் இருப்பதால் அவரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையா, இல்லை அவருடைய உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் செய்திகளை மறைக்கின்றார்களா? மாவட்ட ஆட்சியரின் இந்த பிரச்சனைக்கு தமிழ் மீது பற்று இல்லாமல் உள்ளதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது தற்பொழுது தென்காசியில் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. செய்தியாளர்கள் யாரையும் இவர் மதிப்பதே கிடையாது என்ன காரணம் அதற்கு விடை கிடைக்குமா?