• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின்பணியாளர்களுக்கு மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு..!

Byவிஷா

Oct 31, 2023

பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் விபத்து ஏற்பட்டால், அதற்கு மின்பணியாளர்கள்தான் பொறுப்பு என மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழ் நாடு மின்சார வாரியம் 1957இல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். மின்சார வழங்கல் சட்டம், 1948இன் கீழ் அந்நாளைய அரசின் மின்சாரத்துறைக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது. இன்றைக்கு தமிழகத்தில் மின்வசதி பெறுவோர் எண்ணிக்கை 2 கோடியே 3 இலட்சத்து 87 ஆயிரமாகவும், மின்உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 214 மெகாவாட் ஆகவும் உள்ளது. இந்த வாரியம் மேலும் செம்மையாகச் செயலாற்றிடவும், மின்உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தைப் பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குவதற்கு ஏதுவாகவும், மைய அரசு பிறப்பித்த சட்டத்தின் படி தமிழ்நாடு மின்சார வாரியம், சூலை 01, 2010 அன்று முதல் மூன்று அமைப்புகளாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு. பணியின்போது எர்த் ராடு பயன்படுத்தும் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.