• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் கோயில் இடத்தில் குடியிருந்தோரிடம் வாடகை பாக்கி அதிரடி வசூல்!

தமிழக அரசு அறநிலை துறை மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருபவர்கள் இடம் வாடகை வசூல் செய்ய உத்தரவிட்டு வசூல் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண் 711-ல் 1700 சதுர அடி மற்றும் 533 சதுர அடி பரப்புள்ள இரண்டு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்த சிலர் கோயிலுக்கு வாடகை தொகை, கடந்த பத்து வருடங்களாக கட்டாமல் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து தமிழக அரசு அறநிலைத்துறை உத்தரவின்படி சட்டப்பிரிவு 79 -ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தேனி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், ஆலய நிலங்கள் வட்டாட்சியர் பிரதீபா, கோவில் செயல் அலுவலர் தங்கலதா, சரக ஆய்வர் கார்த்திகேயன் மற்றும் செயல் அலுவலர்கள் சுரேஷ், வைரவன், போத்தி செல்வி, நரசிம்மன் ஆகியோர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வாடகைதாரரிடம் பாக்கி தொகை நான்கு லட்சத்து 10 ஆயிரத்தை கட்டச் சொல்லி கூறினார்கள்.

மதியம் ஒரு மணிவரை அவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. இல்லையென்றால் வீடு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .இதனைதொடர்ந்து அந்த இடத்தில் வசித்து வந்த உமா மகேஸ்வரி என்பவர் மதியம் ஒரு மணி அளவில் மேற்படி ரூபாய் 4 லட்சத்து 10 ஆயிரத்து 5-ஐ உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் செலுத்தினார். இதனையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆண்டிபட்டி டிஎஸ்பி. தங்க கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், காவல்துறையினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.