• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரதமரை கேலி செய்த சிறுவர்கள் மீது அதிரடி நடவடிக்கை

இந்திய பிரதமர் மோடி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கிண்டல் செய்து குழந்தைகள் நிகழ்ச்சி நடத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புலிகேசி மன்னர் போன்றும், மங்குனி அமைச்சர் போன்றும் வேடமிட்ட இரண்டு குழந்தைகள் பாரத பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசு குறித்தும் கேலி, கிண்டலாகப் பேசிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகம் மற்றும் அந்த நிகழ்ச்சியை தயாரித்த நிர்வாகத்தின் அனைவரையும் வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.