• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,

ByS.Ariyanayagam

Apr 23, 2026

திண்டுக்கல் அருகே மனிதநேய பெண் காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் சிரமப்பட்டதை கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலர் திருமதி கார்த்திகாயனி, அந்தக் குழந்தையை தன் கைகளில் ஏந்திக் கொண்டு, அந்த பெண் அமைதியாக தனது வாக்குரிமையை செலுத்த உதவி செய்தார்.

கடுமையான காவல் பணியிலும் தாய்மையின் அருமையை உணர்ந்து, மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர் கார்த்திகாயனி அவர்களின் இந்த செயல் அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.

“காவல்துறையிலும் மனிதநேயம் உணர்த்தும் இந்த நிகழ்வு, சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது.