• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே விபத்து – 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம்

ByKalamegam Viswanathan

Mar 25, 2023

மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம் சமயநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் கருப்பணசாமி கோவில் அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற ஷேர் ஆட்டோ லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

இதில்ஷேர் ஆட்டோவில் இருந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் தூக்கி வீசப்பட்டதில் அனைவரும் படுக்காயம் அடைந்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார் படுகாயம் அடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காலை 7 மணி அளவில் நடந்த விபத்து காரணமாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.