தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் ஓம் சக்தி மடம் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து திருவோணம் நோக்கி வந்த தஞ்சையை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் பிரவீன்குமார் வயது 28 இவர் இன்று மதியம் பட்டுக்கோட்டையில் இருந்து ஊரணிபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாரவிதமாக சாலையில் நடுவே மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்தது.

இதில் மின்சாரம் கழுத்தில் உரசிய படி கீழே விழுந்த பிரவீன்குமார் தலையில் காயம் ஏற்பட்டதுடன் மயக்கமடைந்தார். மின்சார கம்பிகள் இரண்டாக அறுந்து சாலையில் இருபுறமும் கீழே விழுந்தது. இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்சார துறைக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பிறகு பொதுமக்கள் காயம் அடைந்து கிடந்த பிரவீன்குமாரை மீட்டு முதலுதவி செய்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் தகவல் அறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திடீரென ஆள் நடமாட்டம் அதிகமாய் இருக்கக் கூடிய பகுதியில் எதிர்பாராத விதமாக மின்சார கம்பி அறுந்து விழுந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது,








