விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பட்டியூரை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மனைவி கலைச்செல்வி (வயது 38) இவரது தலைமையில் இருக்கண்குடிக்கு பாதயாத்திரை ஆக செல்வது வழக்கம்.

வழக்கம்போல் ஆடி மாதத்தில் இருக்கன்குடி மாரியம்மனை தரிசிப்பதற்காக கலைச்செல்வி தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் தெற்கு வெங்காநல்லூர் பட்டியூர் கிராமத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்றனர். சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி வழியாக சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஆலங்குளத்தில் இருந்து சாத்தூர் வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்த வேன் பாதயாத்திரையாக சென்றவர்களின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கலைச்செல்வி, லிங்கம்மாள் (35 ),அந்தோணியம்மாள் (45), முனியம்மாள் (50) ஆகியோர் காயமடைந்தனர். இதில் கலைச்செல்வி, லிங்கம்மாள், ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் அந்தோணியம்மாள், முனியம்மாள், ஆகியோர் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், வழக்கு பதிவு செய்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வேன் டிரைவர் பாலகிருஷ்ணன் (33)கைது செய்தனர்.