• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தீபாவளிக்கு சுமார் 2 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊருக்கு பயணம்

Byமதி

Nov 3, 2021

தீபாவளியையொட்டி, சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சென்னையின் 6 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜக்கண்ணப்பன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நேற்று இரவு 7 மணி வரை அரசுப் பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், முன்பதிவு வாயிலாக 5 கோடியே 46 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என்றும் அதிக கட்டணம் வசூலித்ததாக 5 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.