• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரையில் “தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி “

ByKalamegam Viswanathan

Jan 30, 2025

மதுரை மாநகராட்சி ‘ தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி “ மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் ஏற்பு

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மற்றும் அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி  மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில்  அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர்.  

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன், குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும், பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என மாண்புமிகு மேயர் அவர்கள் வாசிக்க அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதேபோல், அனைத்து மண்டல அலுவலங்களிலும் உதவி ஆணையாளர் முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், உதவி ஆணையாளர் (பணி) அருணாச்சலம், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், கணக்கு அலுவலர் (பொது) பாலாஜி, கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.