புதுக்கோட்டை திருகோகர்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா திரிசூல பிடாரியம்மன் அம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புறத்தில் உள்ள மாநகர மக்களும் சுற்றி உள்ள கிராமத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு தேங்காய் பழங்கள் மஞ்சள் குங்குமம் பன்னீர் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். பெண்கள் தனது கணவன் ஆயில் நீடிக்க வேண்டி வரலட்சுமி நோன்பை கோயில் வந்து அபிஷேகம் செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.
