• Sun. Sep 15th, 2024

தென்காசியில் பிடிபட்ட கடத்தல் ‘அம்பர் க்ரைஸ்’!

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சுமார் 3 1/2  கோடி  மதிப்புள்ள, அரசால் தடைசெய்யப்பட்ட Amber Grise எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தென்காசி காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்..

தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர்  பாலமுருகன் , சார்பு ஆய்வாளர் கற்பக ராஜா மற்றும்  இரண்டாம் நிலை காவலர்கள் சவுந்தர் ராஜன், இசக்கிமுத்து ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்..

அப்பொழுது, TN 72 BD 7408 என்ற எண் கொண்ட Swift Dzire   என்ற வாகனத்தில்  மறைத்து கொண்டு வரப்பட்ட  சுமார் 3 1/2 கோடி மதிப்பிலான Ambergrise எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை சுமார் 21 கிலோ எடை கொண்ட 2 கட்டிகளை  கன்னியாகுமரி  குலசேகரத்தினை    சேர்ந்த  ஜார்ஜ் மைக்கேல்ரோஸ் மற்றும் திருநெல்வேலி தாழையூத்து சேர்ந்த மோகன் என்பவரும் எடுத்து வந்த நிலையில், காரில் போலீஸார் அவர்களை மடக்கி பிடித்தனர்..

பின்னர், கடையநல்லூர் வனச்சரக அலுவலர் வசம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் முதலியவை வழக்குப்பதிவு செய்ய வேண்டி ஒப்படைத்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *