• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எங்களையும் எங்கள் குடும்பத்தையும் பிச்சை எடுக்க வைக்கும் ஆவின் நிறுவனம்.. காவலாளிகள் போராட்டம்..,

Byதரணி

Sep 1, 2022

சோழிங்கநல்லூர் ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் கடந்த 3மாத ஊதியம் கிடைக்கததால் காவலாளிகள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர்ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக காசோலை தராததால் காவலாளிகளுக்கு மாத ஊதியம் கிடைக்கவில்லை அதனை கண்டித்து காவலாளிகள் கொட்டும் மழை என்று கூட பார்க்கமல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக பணம் தராமல் நிலுவையில் உள்ளதால் சம்பளம் கிடைக்கவில்லை . இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, நாங்கள் முடிந்த அளவுக்கு இரண்டு மாதம் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுத்து வந்தோம். அரசு டெண்டர் ஆச்சே சரியான முறையில் ஊதியம் கிடைக்கும் என்று நம்பினோம். கடந்த 2 மாதம் நிறுவனத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டதால் காவலாளிகளுக்கு ஊதியம் தராத முடியாத ஒரு சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து போரட்டத்தில் ஈடுபட்ட காவலாளிகளிடம் கேட்ட போது…. கடந்த மாதமும் நாங்கள் சம்பளத்திற்காக போரடினோம் ஆனால் எந்த பலனும் இல்லை என்றும். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் மாத மாதம் தொடர்ந்து ஊதியம் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் உடல் நலம் சரி இல்லாமல் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இரண்டு நாள் ஊதியத்தை எங்களிடன் பிடுங்கி எங்கள் வயிற்றில் அடிக்கின்றனர்.அது மட்டும் இல்லாமல் கடந்த மாதம் பாதுகாப்பு போடாத இடத்தில் கணினி திருட்டு போய்விட்டது என்று எங்களை அடித்து துன்புறுத்தினர்.காவாலாளி இல்லாத இடத்தில் திருட்டு போனால் நாங்கள் எப்படி பொறுப்பு ஆக முடியும்.அங்கு இருக்கும் அதிகாரிகள் செய்த தவறில் இருந்து தப்பிக்க எங்களை பலிகடா ஆக்குகின்றனர் இத்தனை அடி உதைகளையும் வாங்கி கொண்டு குடும்ப சூழ்நிலையில் பணி புரிந்து வருகின்றோம். பால்பாண்ணையை நாங்கள் பாதுகாக்கின்றோம் ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை இந்த ஆவின்’ பால்பண்ணைக்கு பணிபுரிந்த நாள் முதல் அல்லல் படுகின்றோம் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கின்றோம் இந்த ஆவின் நிறுவனம் எங்களை மட்டும் பிச்சை எடுக்க வைத்தால் பரவாயில்லை எங்களுக்கு ஊதியம் இல்லாமல் எங்கள் குடும்பத்தையும் வயித்தில் அடிக்கின்றனர் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.