• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காங்கிரசுக்கு முதல் எதிரி ஆம் ஆத்மி -விஜயதாரணி எம்.எல்.ஏ

ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணி கலந்துகொண்டு பேசுகிறார்.
நிகழ்ச்சியில், விஜயதாரணி பேசியதாவது:- குஜராத்தை பொறுத்தவரையில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து இருப்பதாகவும், இதற்கு காரணம் மதச்சார்பற்ற வாக்குகள் காங்கிரசுக்கு முழுமையாக கிட்டாமல் ஆம் ஆத்மியால் சிதறி போய் விட்டது. எங்களுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே இருந்த நேரடி போட்டி தற்போது மும்முனை போட்டியாக களம் மாறி உள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு நேரடியான முதல் எதிரி பா.ஜ.க. அல்ல, ஆம் ஆத்மி தான். இமாசலப்பிரதேச வெற்றிக்கு அங்கு நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுத்து பிரசாரம் செய்ததும், விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்னைகளை தீர்க்க கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, பிரியங்கா காந்தியின் தீவிர பிரசாரம் மற்றும் ஆலோசனைகளும் முக்கிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.