விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் நெசவு மற்றும் பேண்டேஜ் உற்பத்தி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நெசவாளர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு விரதம் இருந்து முளைப்பாரி எடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டு 10,000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர், சத்திரப்பட்டி சமுசிகாபுரம் உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் ஆடி மாதத்தில் ஒரு வாரம் விரதம் இருந்து முளைப்பாரி போட்டு மூன்று அடி முதல் ஐந்து அடி உயரத்திற்கு முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டு இரண்டு நாட்கள் கோவிலில் வைத்து கும்மியடித்து வழிபாடு செய்து இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைத்தனர். திருவிழாவில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் K.S.சந்தோஷ்குமார் தலைமையில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது விழா ஏற்பாடுகளை இராஜபாளையம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம் பி மாயி .தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கே .செல்வம். மத்திய மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் K.S சந்தோஷ் குமார் குளிர்பானங்கள் வழங்கினார்

இந்த திருவிழாவில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனா பிவி தலைமையில் நான்கு ஆய்வாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.