

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது. இந்த பூஜை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது தொன்று தொட்டு இன்று வரை தொடரும் வழக்கம்.
திருவாவடு துறை ஆதினம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24_வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பகவதியம்மன் கோவிலுக்கு வழங்கிய தங்க குடத்தில். சந்தனம் களபம், ஜவ்வாது, பன்னீர் மற்றும் பல வாசனை திரவியங்கள் கலந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பகவதியம்மனுக்கு எண்ணெய் பால், பன்னீர், இளநீர்,தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பூஜை நிறைவடைந்தது. அபிஷேகம் புனித பொருட்கள் அடங்கிய தங்க குடத்துடன் கோவிலுக்கு வெளியே வந்த திருவவாடு மகா சன்னிதானம் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு குங்குமம், சால்வை அணிவித்து ஆசீர்வாதம் நல்கினார்.

