விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி கலைஞர் காலனியை சேர்ந்த குருசாமி என்பவர் மகன் மாரீஸ்வரன் (வயது 20 ) இவர் பட்டாசு ஆலை தொழிலாளி. கடந்த சில தினங்களாக உடல் நல குறைவினால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தவர் குணம் அடையாதால் மன உளைச்சலில் மாரீஸ்வரன் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையினால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில்
சோதனை செய்ததில் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர். குருசாமி (வயது 45) வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் மாரீஸ்வரன் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.