• Sat. Apr 26th, 2025

இளைஞரிடம் பாக்கெட், பாக்கெட்டாக பிடிபட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து கைது..

BySeenu

Mar 21, 2025

கேரளா மாநிலம், வயநாடு ஆனந்தவாடி பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவரது மகன் முகமது சபாத் 24 வயதான இவர். அங்கு இருந்து ரயிலில் பெங்களூரு செல்வதற்காக பயணித்துக் கொண்டு இருந்தார். அப்போது கோவை ரயில் நிலையத்திற்கு வந்த உள்ளது. அப்போது ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த முகமது சபாத் அருகே உள்ள போச்சே ரெஸ்டாரன்ட் முன்பு நின்று புகை பிடித்து உள்ளார்.

அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கோவை பந்தய சாலை போலீசார் கஞ்சா வாசனையை நுகர்ந்து உள்ளனர். இதனால் அவர்கள் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு உள்ளனர். அப்போது முகமது சபாத் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது உடைமைகளை பரிசோதித்ததில் அவர் சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவருக்கு யார் ? கஞ்சா வழங்கியது அல்லது அவர் வேறு ஏதேனும் வகையில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்து வருகின்றாரா ? அல்லது பெரிய அளவிலான கஞ்சா கடத்துவதற்காக இது போன்ற நாடகமாடி உள்ளார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.