தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்க பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் பேட்டி,

மலேசியா நாட்டில் 21 வது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒன்பதாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட்டது,இந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, சீனா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் அக்ஷரா, நிவேதா, ஹர்ஷிதா, வினிஷா,ஃபாலிஷா, ஜியா ஹர்ஷினி உள்ளிட்ட ஏழு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம், மூன்று வெள்ளி பதக்கம்,நான்கு வெண்கல பதக்கம் என்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தநிலையில் இந்தியா சார்பாக பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினர்.அவர்களை சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பயிற்சியாளர் சீனிவாசன் கூறுகையில்,
மலேசியாவில் நடைபெற்ற 21வது கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் என்னிடம் பயிற்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வீராங்கனைகள் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கம்,மூன்று வெள்ளி பதக்கம்,நான்கு வெண்கல பதக்கம் என்று சாதனை படைத்துள்ளனர் இது மிகவும் எனக்கு பெருமையாக உள்ளது.
அடுத்தபடியாக இலங்கையில் நடைபெற உள்ள தெற்காசியா கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் எனது மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும் அதற்காக தொடர்ந்து பயிற்ச்சி அளித்து வருகிறேன் தருகிறேன்.

ஏற்கனவே தேசிய அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற எனது மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி உதவி அளித்தது. மேலும் சிலர் கல்லூரி பள்ளிகளில் இலவசமாக படிக்க தமிழ்நாடு அரசு உதவி செய்தது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு உதவி செய்து வந்தால் கராத்தே வீரர்கள் வீராங்கனைகளின் எதிர்காலம் நல்ல நிலைமையில் இருக்கும் இவ்வாறு கூறினார்.
தங்கபதக்கம் வென்ற வீராங்கனை ஃபாலிஷா கூறுகையில்,
தேசிய அளவில் நடைபெற்ற 21 வது கராத்தே சாம்பியன்ஷிப் இரண்டு பிரிவுகளில் பங்கேற்று ஒரு தங்கப்பதக்கவும், ஒரு வெண்கல பதக்கமும் வென்று உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன் தமிழகத்தில் இருந்து இந்தியா சார்பாக கலந்து கொண்ட பலரும் பல்வேறு பதக்கங்களை வென்று உள்ளனர்.
நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். எங்களது பயிற்சியாளர் கொடுத்த கடின பயிற்சிகள் மூலம் நான் தற்போது வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளேன்.
தற்காப்பு கலை பெண்களுக்கு முக்கியமானது. எனவே அனைவரும் இதை கற்றுக் கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் தேவையானது தனியாக வெளியே செல்லும் பெண்களுக்கு இது ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும்.
மேலும் அடுத்து வரக்கூடிய தெற்காசிய சாம்பியன்ஷிப் கராத்தே பொடியில் பதக்கம் வெல்ல வேண்டும் தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பதக்கங்களை வெல்ல வேண்டும் இவ்வாறு கூறினார்.
தங்கபதக்கம் வென்ற வீரங்கனை ஜியா ஹர்ஷினி கூறுகையில்,
பயிற்சியாளர்கள் தொடர்ச்சியாக தங்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகளை கற்றுக் கொடுத்ததன் மூலமாக சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த கராத்தே சாம்பியன்ஷி போட்டியில் தங்க பதக்கம் வென்று உள்ளேன். ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டனர். அனைத்து போட்டிகளும் மிகவும் கடுமையாக இருந்தது. தொடர்ந்து கடுமையான பயிற்சிகள் மூலம் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வெல்ல வேண்டும் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.




