• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..,

BySeenu

Apr 5, 2025

கோவைக்கு வருகை தந்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வழி நெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. முதல்வருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வருகை புரிந்தார்.

*கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், கழக துணைப்பொதுச் செயலாளர்கள் செயலாளர் ராசா எம்பி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிச்செல்வன், காவல் ஆணையாளர் சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கணபதி ராஜ்குமார் எம்பி, ஈஸ்வரசாமி எம்பி, திருப்பூர் மேயர், எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்மநாபன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.