• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தை மீண்டும் கட்டமைக்க ரயில்வே துறை அமைச்சர் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Apr 5, 2025

உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டமான அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் மீண்டும் கட்டமைக்க மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பார்வையிட உள்ளேன். -மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியில் கூறினார்.

நாளை ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் அவர்களுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் அதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அப்போது பாஜகவினர்கள் மத்திய அமைச்சர் வணக்கம், நல்லா இருக்கீங்களா என தமிழில் நலம் விசாரித்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கூறுகையில்,

பாம்பன் கடல் பாலம் முதல் செங்குத்தான கடல்பாலம். நமது பொறியாளர்கள் மூலம் இந்த பெரிய வேலை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற முக்கிய பாலங்களைக் கட்டியதற்கும், தமிழ் கலாச்சாரத்துடன் இணைத்ததற்கும் பிரதமருக்கு நன்றி சொல்கிறேன். மதுரை ரயில் நிலையத்தையும் பார்க்க உள்ளேன். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பார்க்க உள்ளேன். உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டமான அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் அதை மீண்டும் கட்டமைக்க பார்வையிட உள்ளேன் என கூறினார்.