• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் பர்வேசுக்கு உற்சாக வரவேற்பு..,

ByS. SRIDHAR

May 22, 2026

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பார்வேஸ் இன்று முதல் முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவருக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்….

2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சரவையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பர்வேஷ், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நேற்று பதவி ஏற்றார். இதையடுத்து புதுக்கோட்டைக்கு வருகை தந்த அமைச்சருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ரோஜா இல்லத்திற்கு சென்ற அமைச்சர் பர்வேசுக்கு, அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என பலரும் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். அமைச்சர் பர்வேசை சந்திக்க தவெக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்து முண்டியடித்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.