• Thu. Mar 27th, 2025

உசிலம்பட்டி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

ByP.Thangapandi

Mar 30, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது., இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தொட்டப்ப நாயக்கணூரைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்., இந்நிலையில் அவருடன் வந்த தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த விஜயகுமார், காரில் வந்த மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர், அவரது மனைவி ஜான்சிராணி, மகள் சுபஸ்ரீ, மகன் கோகுல் மற்றும் இவர்களது உறவினர் ஸ்ரீவைஸ்ணவி உள்ளிட்டோர் படுகாயம் மற்றும் சிறுகாயமடைந்தனர்.

இந்த விபத்தின் போது பின்புறம் வந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மற்றுமொரு இருசக்கர வாகனத்தில் வந்த வைகை அணையைச் சேர்ந்த முருகன் என்பவர் உள்ளிட்ட சுமார் 7 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் காயமடைந்தவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கும், க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டு விபத்தில் உயிரிழந்த சிவா -வின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் வந்தவர்கள் மேகமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தாகவும், கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.