சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், தவறான சிகிச்சையில் குழந்தையின் கை அழுகிப் போய் கை அகற்றப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அழுகிய நிலையில், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள 3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று விசாரணை மேற்கொள்கிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் அழுகிய ஒன்றரை வயது குழந்தையின் கை, அறுவை சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் செவிலியர்கள் என்று குழந்தையின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக சுகாதாரத்துறை 3 துறை மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இந்த விசாரணை குழுவினர் இன்றுமுதல் விசாரணையை தொடங்குகின்றனர். தவறான சிகிச்சை தொடர்பாக, சம்பந்தபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விசாரணை குழு, தங்களது விசாரணையை 2 தினங்களில் முடித்து, விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை முகமது மகிர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் இருந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தவறான சிகிச்சையால் அந்த குழந்தையின் கை அழுகத்தொடங்கியது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குழந்தையின் கையில் ட்ரிப் போடும் போது ஏற்பட்ட கவன குறைவாலேயே, குழந்தையின் கை அழுகியதாக கூறப்படுகிறது. இந்த குழந்தையின் வலது கை கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென அழுக தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைய்ல் சிகிச்சை பெற்று வந்த முகமது மகிர், எழும்பூர் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு பரிசோதிதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தையின் உயிரை காப்பதற்காக அழுகிய கையை அகற்ற முடிவு செய்தனர். அதனடிப்படையில் அந்த குழந்தைக்கு இன்று மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில், குழந்தை முகமது மகிரின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் தவறான சிகிச்சையா அல்லது மருத்துவ பணியாளர்களின் கவனக் குறைவா என்பது குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் அறிவித்தார். அதுபோல, அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், தவறான சிகிச்சையா என்பது குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு இன்று விசாரணையை தொடங்குகிறது. இரு நாட்கள் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த குழு சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.