சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னலில் நேற்று நள்ளிரவில் வாகனங்கள் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கனரக லாரி சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மறைமலைநகர் காவல் துறையினருக்கும் போக்குவரத்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசாரும் பொது மக்களும் இணைந்து காருக்குள் சிக்கிக் கொண்ட நபர்களை போராடி மீட்டனர்.
இதில் காரில் இருந்த சரவணன்(24), அய்யனார்(70) மற்றும் ஒரு வயதுடைய சாய் வேலன் என்கிற குழந்தை என மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் படு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தெய்வபூஞ்சோலை(52), நந்தினி(32),இளமதி(7) மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு சிங்கப்பெருமாள் கோவில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது,

மேலும் இது குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ஆறு பேர் சென்னை துரைப்பாக்கத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் லாரி ஓட்டுனர் தப்பி ஓடி நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்தோணி ராஜ் (வயது 42) என்பது தெரியவந்துள்ளது.
மேலும் வண்டலூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் பொழுது சிக்னலில் நின்று கொண்டு வாகனங்களை கவனிக்காமல் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது,
மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அந்தோணி மீது 281,125(b),106(l) bns ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை சேர்ந்த ஆறு பேர் சென்னை துரைப்பாக்கத்தில் உறவினர்கள் நிகழ்ச்சி சென்று மீண்டும் மதுரை செல்லும் போது விபத்து நடந்துள்ளது.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .













; ?>)
; ?>)
; ?>)